SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

பிரபலமாகி பணம் சேர்க்க குழந்தைக்கு நஞ்சூட்டியதாக, குயின்ஸ்லாந்து தாய் கைது

1/17/2025
நன்கொடைகளைப் பெறவும், சமூகவலைத்தளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் நோக்கிலும், தனது ஒரு வயது குழந்தைக்கு அங்கீகரிக்கப்படாத மருந்துகள் வழங்கியதன் ஊடாக நஞ்சூட்டியதாக குயின்ஸ்லாந்து பெண் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:30

Ask host to enable sharing for playback control

விரைவில் ஆஸ்திரேலியா வரும் Rap Ceylon இசைக்குழு

1/17/2025
ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் Rap Ceylon இசைக் குழுவின் துடிப்பான மற்றும் உற்சாகமான நிகழ்ச்சிகளை அனுபவிக்கத் தயாராகுங்கள்! வாகீசன் ரா அருள், அட்விக் உதயகுமார் மற்றும் திஷான் விஜயமோகன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த துடிப்பான குழு, பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் ஒரு சிலிர்ப்பூட்டும் கலவையை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வர இருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை துடிப்பான தாளங்கள் மற்றும் நவீன இசையுடன் கலந்து எடுத்து வருகிறார்கள் Rap Ceylon இசைக் குழுவினர்.

Duration:00:19:41

Ask host to enable sharing for playback control

சிட்னியில் மலரத் தயாராகும் "பிணநாற்றம் வீசும் பூ" ! எங்கே எப்படி பார்வையிடலாம்?

1/16/2025
சிட்னி தாவரவியல் பூங்காவில் உள்ள "Corpse Flower"- "பிணநாற்றம் வீசும் பூ" 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:51

Ask host to enable sharing for playback control

“நுண்ணறிவு குறித்து தொல்காப்பியத்திலேயே விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது"

1/16/2025
முனைவர் இரா. சிவகுமார் அவர்கள், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருள் கனிம வள பொறியியல் துறை கணித மூத்த விரிவுரையாளர்.

Duration:00:14:14

Ask host to enable sharing for playback control

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

1/16/2025
இலங்கை அதிபரின் சீனப் பயணம், நாடாளுமன்றத்தில் எதிரொலித்த மலையக மக்களின் பிரச்சினைகள், மற்றும் 13வது அரசியலமைப்புக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடாத்துவோம் என உறுதி வழங்கியுள்ள அரசு- இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:32

Ask host to enable sharing for playback control

சிறுவர்களை சிறையில் அடைப்பதால் நாட்டின் நற்பெயருக்குக் கறை

1/16/2025
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 17 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.

Duration:00:04:16

Ask host to enable sharing for playback control

NBN நவீன மயமாவதால் நமக்கு என்ன பலன்?

1/16/2025
National Broadband Network – சுருக்கமாக NBN என்று அழைக்கப்படும் இன்டர்நெட் – இணைய இணைப்பு சேவைக்கு அரசு இன்னும் அதிகமாக 3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குவதாக பிரதமர் antony Albanese அறிவித்தார். National Broadband Networkஐ நவீன மயமாகுவதன் மூலம் சாதாரண மனிதர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வியுடன்தா தயாரிக்கப்பட்ட “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. தயாரித்து முன்வைப்பவர்: றைசெல்.

Duration:00:06:46

Ask host to enable sharing for playback control

பனாமா கால்வாயை ராணுவத்தை பயன்படுத்தி கையகப்படுத்துவோம் என்று Trump ஏன் கூறுகிறார்?

1/16/2025
பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் தரவேண்டும் அல்லது ராணுவத்தை பயன்படுத்தி அதை அமெரிக்கா கைப்பற்றும் என்று எதிர்வரும் திங்கள் (20 January) அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் Donald Trump அதிரடியான கருத்துக்களை அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பனாமா கால்வாய் குறித்த வரலாறு மற்றும் இன்றைய பின்னணியை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Duration:00:11:24

Ask host to enable sharing for playback control

நாடு முழுவதும் கத்திகளின் விற்பனையை நிறுத்துவதாக Coles அறிவிப்பு!

1/16/2025
குயின்ஸ்லாந்தில் 13 வயது சிறுவனால் Coles ஊழியர் ஒருவர் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சமையலறை கத்திகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:10

Ask host to enable sharing for playback control

போகிப் பொங்கல்: இன்றைய சூழலில் தேவையான விழாவா?

1/16/2025
போகிப் பொங்கல் நீண்ட பாரம்பரிய வரலாறு கொண்டது. ஆனால் இன்றைய சுற்றுப்புறச் சூழல் பின்னணியில் போகிப் பொங்கல் அர்த்தம் தரும் விழாவா? நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: சிட்னியில் வாழும் சுசி விஜயகுமார் மற்றும் தமிழகத்திலிருந்து Environmentalist Foundation of India அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் ஒலித்த நாள்: 12 January 2022

Duration:00:09:46

Ask host to enable sharing for playback control

திருவள்ளுவரின் பிறந்த நாளும் தமிழ்ப் புத்தாண்டும்

1/15/2025
தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் 2056வது பிறந்த நாள் இன்று. திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் செந்தலை கௌதமன் மற்றும் 'ஆய்வுக் களஞ்சியம்' என்ற மாத இதழ் ஆசிரியருமான எஸ். பத்மநாபன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். .

Duration:00:18:35

Ask host to enable sharing for playback control

இந்தியாவில் நடைபெறும் கோ கோ உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லுமா?

1/15/2025
இந்தியாவில் மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான கோ கோ விளையாட்டின் முதல் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகிவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியும் கலந்துக்கொள்கிறது.

Duration:00:06:40

Ask host to enable sharing for playback control

Autism உள்ளவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் என்ன உள்ளது?

1/15/2025
Autism உள்ளவர்களின் நலனை மேம்படுத்த நாட்டின் முதலாவது தேசிய Autism Strategy திட்டத்தை பெடரல் அரசு அறிவித்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்த விரிவான விளக்கம் மற்றும் திட்டத்தின் அறிவிப்பு குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Duration:00:07:13

Ask host to enable sharing for playback control

காசாவில் போர்நிறுத்தம் செய்ய ஹாமாஸ் – இஸ்ரேல் ஒப்பந்தம் கையெழுத்தானது

1/15/2025
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 16 ஜனவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Duration:00:04:45

Ask host to enable sharing for playback control

சிட்னி ரயில் வலையமைப்பின் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!

1/15/2025
சிட்னியின் ரயில் வலையமைப்பு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததால் நகரின் பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:27

Ask host to enable sharing for playback control

மெல்பன் மேற்கு தைப்பொங்கல் திருநாள் 2025

1/14/2025
தமிழ் கலாச்சார மேம்பாட்டு அமைப்பு, ஆஸ்திரேலியா நடத்தும் பொங்கல் விழா மெல்பன் மேற்கு பகுதியில் ஜனவரி 19ம் திகதி நடைபெறவுள்ளது. இது குறித்து இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ரங்கனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:06:01

Ask host to enable sharing for playback control

தமிழரின் “பொங்கல் விழா” வரலாறு என்ன?

1/14/2025
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவின் தொன்மை,வரலாறு குறித்து சங்க இலக்கிய நூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் என்ன பதிவு செய்துள்ளன? விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் வாழும் மூத்த இலக்கியவாதி மாத்தளை சோமு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Duration:00:07:20

Ask host to enable sharing for playback control

பெரியார் தொடர்பான சீமானின் சர்ச்சை பேச்சு: விரிவான பார்வை

1/14/2025
தமிழ்நாட்டில் பெரியார் குறித்து சீமான் மேடையில் பேசியது தொடர்ந்து விமர்சிக்கப்படும் நிலையில், இந்த செய்தியின் பின்னணியை விரிவாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Duration:00:08:25

Ask host to enable sharing for playback control

Los Angeles காட்டுத்தீக்கு என்ன காரணம்: கட்டுப்படுத்துவது ஏன் கடினமாகவுள்ளது?

1/14/2025
அமெரிக்காவின் Los Angeles நகரில் இரண்டு பெரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.இக்காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் இதன் சமீபத்திய நிலவரம் என்ன என்பது தொடர்பில் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:06:34

Ask host to enable sharing for playback control

சிட்னியில் ஒன்பது பிரபலமான கடற்கரைகள் மூடப்பட்டன!

1/14/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 15/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Duration:00:03:54